ஆசிரியர் தினம்
உயிர் பிறப்பித்தார் பெற்றோர்
அவ்வுயிர் சிறப்பித்தார் கற்றோர்
எழுத்தானது கண்
இறையும் குறைவே
எழுத்தறிவித்தவர் முன்
சான்றோன் என கேட்ட தாய்
மகிழ்வாள்
சான்றோனாய் மாற்றி மற்றுமொரு தாயாய் இவர்
மகிழ்வார்
பிறையாய் தேய்வார்
முழு நிலவுகள் செய்வார்
சுடர் விட செய்து
இவர் மனம் குளிர்வார்
புது பார் அதை புனைவார்
மன்னவன் ஆகினும்
குயவனாய் ஆகினும்
விதியது வென்றிட
மதி அது வேண்டும்
அது கொடுத்திடும் ஆசானை
மதித்திடல் வேண்டும்
குறைகளை களைந்து
வரைமுறை அளந்து
முறைபட செய்வார் நீ
முறைப்பினும் செய்வார்
கற்றதை கொடுத்து தீய
மற்றவை தவிர்த்து
கொற்றவன் ஆக்குவார் அதையே
கொள்கையாய் கொண்டு வாழ்வையும் போக்குவார்
இவரது மனமது
குளிர்ந்திடும் என்று...?
இவரது மாணவன்
உயர்வதை கண்டு
குருவினை மதிப்போம்
அவர் சொல் வழி நடப்போம்
அதுவே போதும்
நம் வாழ்வதில் செழிப்போம்
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்