அன்புள்ள ஆசிரியருக்கு
அம்மா என்றழைக்க கற்றதுத்தந்தாள் அம்மா..
அம்மா என்றேழுத்த கற்றதுத்தந்தாய் அம்மா..!
உன் கம்பின் சிறுபங்கும்
உனதன்பின் பெரும்பங்கும்
அதிகமாய் பதம்பார்தது எங்களை தான்...
எங்கள் ஆயுளின் ஆனந்தத்திற்கு
அறிவெனும் கடலை நீ தினம் கடைந்தாய்..
கல்வி எனும் காண்டிபம் அளித்து
வாழ்கை எனும் போர்களத்தை வென்றுவர
வெற்றிதிலகம் போட்டு அனுப்பிவைத்தாய்..
கற்றவன் நல்வாழ்கை பாழானால்
கற்பித்தவனை இவ்வுலகம் பழிசொல்லும்..
விழாது உன்மேல் அவ் வீண்பழி
வாழ்ந்துடுவேன் இவ்வுலகில் நல்வழி..
பதித்துடுவேன் வரலாற்றில் என் பெயரை
புகழ்ந்திடும் வையகம் என்றும் உன் பெயரை...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
