நம் வாழ்க்கை நடப்புகள்

இன்னும் எழுதி முடிக்க கால அவகாசம் தேவை



மனதில் சிறு சிறு வெறுப்பு
எதற்கு இந்த வாழ்க்கை என்ற தவிப்பு
நொறுங்கிக் கொண்டிருக்கிறது பல மனிதர்களின் உள்ளம்
பொய்த்துக் கொண்டிருக்கிறது பருவமழை
வாடிக் கொண்டிருக்கிறது பல உயிர்கள்
காற்றலையாக மாறிவிட்டன நம் கடிதங்கள்
நன்றாய் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
மது விநியோகம்
செவிலியர்களுக்கு மட்டும் கிடைத்துக் கொண்டே இருக்கிறது வேலை
காரணம் நாளுக்கொருமுறை நோய்களின் பெருக்கம் -அதனால்
அமோகமாக நடைபெறுகிறது மருந்து விற்பனை
நோய்கள் மட்டும் குறைந்த பாடில்லை
படித்த பல இளைஞர்களுக்கும் வேலை -
வெளிநாட்டு மண்ணிலே
கைத் தொழில்கள் அனைத்தும் முடங்கிவிட்டன
காரணம், நகரத்திற்க்கொரு தொழிற்ச்சாலை
குடிநீரைத் தேடி மக்கள்
குறைந்து கொண்டே போகிறது நிலத்தடி நீர்
ஆண்டு தோறும் கூடிக் கொண்டே இருக்கிறது
தற்கொலை செய்வோர் எண்ணிக்கை
தினசரி பத்திரிக்கையில் ஒரு பக்கத்திலாவது
வந்து விடுகிறது
எங்கோ ஒரு பெண் கற்பழிப்பு -
என்ற வாசகம் மட்டும்
படிக்கும் பல இளைஞர்களையும்
வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது வலையகம்
எத்தனைக் கட்சிகள் மாறினாலும்
அரசியல் வாதிகள் மட்டும் செழிப்பாக
அங்கு மக்களின் நிலைமை அதோகதி.......
வறுமை மட்டும் ஒழிந்தபாடில்லை
வாழ்க்கையை தேடிச் செல்லும் குழந்தைகளுக்கு
வழிகாட்ட ஆயிரத்தில் சிலர் மட்டும்
படிப்பின் அருமை பிற்காலத்தில் தான்
பலருக்குப் புரிய வருகிறது
ரோட்டோர மரங்களையெல்லாம் தயார்ப்படுத்திவிட்டார்கள்
வீடு கட்டி குடியேற
மரங்களெல்லாம் அழிந்துகொண்டிருக்கின்றன
மனிதர்களின் சாமர்த்தியத்தால்
மரம் வளர்த்து மழை பெறுவோம் -எனச்
சொல்லும் அரசாங்கமே அழித்துக்கொண்டிருக்கிறது மரங்களை
நான்கு வழிச்சாலை -எனும்
காரணத்தைச் சொல்லி
ஏறக்குறைய எல்லா வயதினரும் தம் உறவுகளை கைவிட்டு
கைப்பெசியிடமே அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள்
பிடித்த ஓர் உறவு தன்னை உதறித்தள்ளும் போதும் ,
உழைத்த உழைப்பு வீணாகும் போதும்
வாழ்க்கையே போய்விட்டதாக எண்ணி
வாழ்வின் முடிவைத் தேடுவோர் பலர்
மின்னலாக ஓடி மறைந்து கொண்டிருக்கும் வாழ்நாட்களில்
தன்னிடம் சிரித்துப் பேச ஓர் உறவு இல்லையே -என
ஏங்குவோர் பலர்
மழை வெள்ளத்தால் அழிந்த்துகொண்டிருக்கின்றன சில கிராமங்கள்
மழையே இல்லாமல் வாடிக்கொண்டிருக்கின்றன பல உயிர்கள்
பேசியே சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள் அரசியல்வாதிகள்
பேச வேண்டிய மக்கள் திகைத்து வாயடைத்துப்போய் நிற்கிறார்கள்
தினமும் பல லட்சம் உயிர்கள் பலி
கருக்கலைப்பு எனும் கொடூரத் தாக்குதலால்
சாதி எனும் பெயரில் தினமும் -பல
சண்டைகளும் சவால்களும்
உயர்ந்து கொண்டே போகிறது பெட்ரோல் டீசல் விலை -அங்கு
உல்லாசப் பயணம் மேற்கொள்கிறார்கள்
அமைச்சர்களும் அதிகாரிகளும் ஆளுக்கொரு காரிலே
அரசியல் இலவசங்கள் மக்கள் பெருமிதம் -காரணம்
தங்கள் வீட்டிலும் தொலைக்காட்சிப்பெட்டி
மிக்சி, மின்விசிறி மற்றவை எல்லாம் ........
ஆனால் அனைத்தையும் வாங்கிக்கொண்டு அல்லாடினோம்
காரணம், இடைஇடை நிறுத்தம் -மின்சாரம் மட்டும்
தினமும் மனித வேட்டை ----------திட்டம் -செயல்
அனைத்தும் மனிதர்களே ......
மாணவர்களின் மிரட்டலில் இன்றைய ஆசிரியர்கள் ............
இந்தியாவைக் கைப்பிற்றும் முயற்ச்சியில் ---
சீனாவும் பாகிஸ்தானும் ......இந்திய அரசாங்கம்
அவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ................
எவ்வளவோ புகைகளை மூட்டிப் பார்த்துவிட்டோம் -
அழ மறுக்கிறது மேகம் ............
ராமநாதபுரம் மீனவர்ப் பிரச்சனைத் தீர்ந்தபாடில்லை .......பாவம்
அவர்களைச் சுமக்கும் கடல் மட்டும் ........
அமைதியாய்..அலையலையாய் ...அசைந்த்துகொண்டிருக்கிறது .....
மீன்களைஎல்லாம் பிடித்துத் தின்கிறார்களே -என்ற
கோபத்திலோ என்னவோ ---அன்று
சுனாமியாய் எழுந்து -
பல மக்களையும் பாதி மீனவர்களையும்
அழித்துவிட்டு அமைதியாகிவிட்டது மீண்டும்.....
அங்கு சொல்லிக்கொண்டே போகிறது --
புகைப்பிடிப்பவர்களிடமிருந்து வெளிவரும் புகை .........
உன்னையும் ஒரு நாள் அழித்துவிடுவேன் என்று .......
அன்று சிந்திக்க வைத்தன திரைப்படங்கள்--இதோ
இன்று சிரிக்கமட்டும் -------------பல பாடல்கள்
மக்களுக்குப் புரிவதே இல்லை ..............
அரசாங்க வேலை வேண்டும் என்றாலே --
கொடுககல் வாங்கல் நடைபெறுகிறது -------வேறு ஒன்றும் இல்லை
லஞ்சம் தான் ..............
தன் உரிமையைக் கேட்பவர்களை எல்லாம்
தீவிரவாதிகள் எனும் பெயரால்
வர்ணிக்கின்றனர் ..........
பெருகிக் கொண்டே வருகின்றன பெற்றோர் விடுதிகள்
முதியோர் இல்லம் எனும் பெயரில் .........

.

எழுதியவர் : james (5-Sep-14, 4:52 pm)
பார்வை : 101

மேலே