புதிதாய் பிறந்திடு
![](https://eluthu.com/images/loading.gif)
தாய் வீட்டு
சீதனமாம்
தங்க உடலிருக்க
மேனியெங்கும்
பொய்யாய் மின்னும்
பொன் நகைகள்
கேட்பாரடி தோழி.........
கொஞ்சும் மொழி
பேசிடுவோர் மயங்கி
விடாதே .........
மதியதனை
தொலைத்துவிட்டு
பின் மிதியடிஎன
மாறிவிடாதே
விழித்தெழு
பெண்ணே விழித்தெழு
விதியென்னும்
தீக்குழியில்
விதையாய்
மாறி பூத்திடு......