தோழர் ராஜேஷ்குமார் -எழுத்துகாம்-விருது பெறுகிறார்வாங்க வாழ்த்துவோம்

தோழமை நெஞ்சங்களே...

வணக்கமும் வாழ்த்துக்களும்...

ஒரு நல்ல செய்தி....

உலகளாவிய நிலையில் நாள்தோறும் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி -பக்க அளவில்.படைப்பு என்ணிக்கை அளவில் ,கருத்து மழைப் பொழிவு நிலையில் ,தமிழ் மொழி வளர்ச்சிக்கு சில ஊடகங்களே இன்று பணியாற்றி வருகின்றன...இந்நிலையில் வலைதள சேவை என்பது பெரிதும் பயன்பாட்டுக் களத்தில் பவனி வந்து அவனி முழுதும் மனிதர்களை ஒன்றிணைக்கிறது...

அன்றியும் படைப்பாளிக்கு முழு சுதந்திரம் அளித்து படைப்பு அளிப்பதில் எவ்வித தணிக்கையும் இன்றி பல வகைமைகளில் தமிழ்ச் சேவையாற்றிவரும் வலைதளங்களில் சிறப்பு மிக்க ஒரு வலைதளமென நமது எழுத்து.காம் ஆகச் சிறந்த ஆன்றோர்களால் தெரிவு செய்யப் பட்டுள்ளது. இதற்கான விருதளிப்பு விழா செப்டம்பர் 27ம் நாள் சென்னையில் நடை பெற உள்ளது.

இதற்கான தனிமனித முனைப்பும் ஆர்வமும் கொப்பளிக்கும் சேவையாளர் என தோழர் ராஜேஷ்குமார் விருது பெற உள்ளார்-பன்முறை அவர் ஏற்க மறுத்தும் கூட தேர்வுக் குழு ஒருமனதாக தெரிவு செய்துள்ளது.

இளம் வயதில் பாராட்டை ஏற்க விரும்புவது இயற்கை....ஆனால் ராஜேஷ் மிகவும் வித்தியாச கொள்கை கொண்டுள்ள இளைஞர்...அன்றியும் பயன் கருதாப் பணியாற்றுபவனின் பாதம் நோக்கி பாராட்டே பாதையாகுவதுப் போல விருதுகளே விதியின் விளக்குகள் ஆவதுப் போல தனிமனித பாராட்டு மறுத்த காரணத்தால் அவரின் இயக்கம் எழுத்து.காம் விருது பெறுகின்றது.

சிறந்த நூல்கள்.....கவியரங்கம் உரை வீச்சு.....சிறந்த பத்திரிக்கைகள் ...சிறந்த .ஊடகங்கள் ...சிறப்புக்குரிய .ஆன்றோர்கள் ...என விருது தெரிவும் நிகழ்வுகளும் நீண்டு செப்டம்பர் 27ல் ஈரோடு தமிழன்பன் 80ம் அகவை நிறைவு விழாவில் அழகும் அங்கீகாரமும் அரங்கில் காணவும் கேட்கவும் வாருங்கள்......

.கவிஞர் சிற்பி...அப்துல் ரகுமான்...இன்குலாப்...தமிழருவி மணியன்...வைரமுத்து....பேராசிரியர் அன்பழகன்...தோழர் நல்லக்கண்ணு....வீரமணி...என பலரும் பங்கு பெற உள்ள விழாவிற்கு வாருங்கள்..காலை முதல் இரவு வரை மூவேளை உணவு விருந்துடன் (வயிற்றுக்கும் செவிக்கும் ) களித்திருங்கள்..

மிக அருமையான நமது குடும்பம் தமிழ்ச் சேவைக்காக பாராட்டப் படும் நாளில் எல்லோரும் பங்கு பெற அன்போடு அழைக்கிறேன்...

அன்புடன் அகன்

எழுதியவர் : அகன் (6-Sep-14, 7:51 am)
பார்வை : 294

மேலே