கிழித்து எறிகிறேன்
நான் எழுதி நீ படிக்க விரும்பிய போது
எழுத மறுத்தன என் கைகள் அன்று
நான் தடுத்து நிறுத்தினாலும்
எழுத சொல்கிறது என் மனம் இன்று
என்ன எழுதினால் என்ன பயன்
நீ உயிரோடு இல்லையே இதை படிக்க
எழுதி முடித்தவுடனேயே கிழித்து எறிகிறேன்
என் மனதை உன் நினைவுகள் குதறிக் கிழிப்பதால்......