ஓவியப்போட்டி
அரசு மேல்நிலைப்பள்ளி
இன்று ஓவியப்போட்டி நடைபெறுவதால் மாணவர்கள் பதட்டத்துடன் காணப்பட்டனர்.
அதில் சாந்தனுவும் இருந்தான்.என்ன வரைவது என்று இன்னும் பிடிபடவில்லை.
சிறுது நேரத்தில் போட்டி ஆரம்பிக்கப்பட்டது .
போட்டியின் தலைப்பு "உலகில் எது அழகு?"
சாந்தனுக்கு ஒன்றும் தோன்றவில்லை,சுற்றியும் பார்த்தான் எல்லோரும் இயற்கை காட்சி, மலர், என்று
வரைந்த வண்ணம் இருந்தனர்.
சரியென்று அவனும் வரைய ஆரம்பித்தான்.
அரைமணி நேர அவகாசம் முடிந்தது.
போட்டியின் முடிவுக்காக மாணவர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.
சிறுது நேரத்தில் முடிவு அறிவிக்கப்பட்டது .சாந்தனுவுக்கு தான் முதல் பரிசு !
பரிசை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு ஓடி வந்தான்.தனது அம்மாவிடம் காண்பித்தான்.
அவனது முகத்தை மூடிய வண்ணம் இருந்தாள்.
"என்ன சாந்தனு என்ன வரைஞ்ச கொண்டா பார்க்கலாம் " என்று மகிழ்ச்சி தாளாமல் வாங்கி பார்த்தாள்.
அதில் ஆசிட் ஊற்றி சிதைந்து போன தனது அம்மாவின் முகத்தை வரைந்திருந்தான்.
பார்த்த அம்மாவுக்கு கண்ணீர் எட்டிப்பார்த்தது.அன்போடு சாந்தனுவை கட்டிப்பிடித்தாள்.
உண்மையில் அம்மாவுக்கு நிகர் அழகு எதுவும் இல்லை .