உண்மைக் கதை

அவன் ஒரு காந்தி மகானும் அல்ல,தியாகியும் அல்ல . வயோதிபனும் அல்ல, சிறுவனும் அல்ல.பின்பு யார் தான் அவன்?
எவனோ ஒரு மனிதன் . வயதோ 35. பேருக்குதான் அவன் வாலிபன் . நிஜத்தில் அரைவயதைத் தாண்டியக் கிழவன் .திருமணம் முடிந்ததோ ,இல்லையோ ? என்பது கேள்விக்குறி .
இன்று அவன் ஊரைச் சுற்றி ஊர்வலம் சென்றான் . தினமுமே அவன் அதே ஊரைச் சுற்றுபவன்தான்.ஆனால் இன்று அவன் சுற்றுவது மிகவும் வருத்தம் அளிப்பதாக இருந்தது. ஏனெனில் இதில் அவனை அழைத்துச் செல்ல அவனது உறவினர்களின் உதவி தேவைப்பட்டது .
தினமும் அவன் நடந்து வந்த பாதையில் இன்று அவனை அழைத்துச் செல்ல அவனது உறவினர், நண்பர்,பெற்றோர், உற்றார் என அனைவரின் பாசப் பிரிவோடு அவன் மேல் உள்ள பாசங்களை வழிந்தோடும் கண்ணீரால் கரையவிட்டு அழைத்துச் செல்லும் அன்பு உறவுகள்!
கேள்விப்பட்டதில் அறிந்தேன் ,அவன் வசதிக்கு குறைவில்லை என்று. பொது மக்களின் பார்வையில் அவன் ஒரு தண்ணி வண்டி, ரவுடி .இது அவன் வாழ்ந்த 35 ஆண்டுகளில் அவன் பெற்ற புகழ் பெயர்கள்.
"இன்று கிடைத்த கடலைப் பொறி இவனது வாழ்க்கைதான் நம் மக்களின் வாய்க்கு".என நான் நினைத்து பேருந்தின் முதல் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தேன்.
வழியின் சுவர்கள் அவனது வரலாற்றை சற்றேனும் விளக்கியது. ஆங்காங்கே அவனது கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் அவன் வயதை மட்டுமல்ல ,அச்சுவரொட்டிகளின் எண்ணிக்கை அவனது வசதியையும், புகழையும் தெரிவித்தது. நான் சற்றேனும் தெளிந்தேன்,இப்பக்கம் தான் அவனது வீடு இருக்குமோ என நினைத்த கணத்தில் 3 காவலர்கள் பேருந்தை வழி மறித்து ஓரம் கட்டினர். எதிர்பாராத விதமாக பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்ததால் ஏன் என நடப்பவற்றையெல்லாம் என்னால் சரியாகப் பார்க்க முடிந்தது.
திடீரென ஏதோ பொது மக்களின் கூட்டம் போல் சாலையை நிரப்பி தாரைத் தப்பட்டை அடித்து ஒரு வண்டி நிறைய நண்பர்கள் பூமழை தூவ, அவனது உறவுகள் முன் நடக்க அவனது வெற்று உடல் இப்பூமியில் இறுதியாக இளைப்பாறி வருகிறது. ஓர் அமரர் ஊர்தியில்.
முன்புறம் மக்களின் கூட்டம் ,பின்புறமும் பெரும்படை .சாலையோ தேசிய நெடுஞ்சாலை.அவனின் பிரிவின் துயரம் அவனது சொந்தங்களைத் தாண்டி மக்களின் பார்வைக்கும் அனுதாபமாக இருந்தது.
ஆயினும் ஊர்வல நிகழ்வுகள் அவனை இன்னும் சீச்சீ என வெறுக்க வைத்தன.அவனது அதீத அன்பர்களால்.
ஏனெனில் வழி செல்லும் பேருந்துகளுக்கு சிறிதும் வழிவிடாமல் மக்களைக் காக்க வைத்தது,எதிரில் வந்து நிற்கும் வாகனங்கள் ஒரு 50ஆகிலும் இருக்கும் ,அவனை பூமழை தூவி இறுதியாக அழைத்துச் செல்ல வந்த உறவுகள் அவன் வரும் வழியில் சிறிதும் ,சாலையில் செல்லும் மக்கள் ,பேருந்துகளின் மேல் சிறிதுமாக பூக்களை எறிந்தும் பிறரை மனம் கூசச் செய்தனர்.இவ்வாறாக 1|2 மணிநேரம் கரைந்தது பேருந்திலேயே.ஆயினும் மக்கள் வேறு வழியில்லாமல் அமைதி காத்தனர். ஏனெனில் அவனது இறுதி ஊர்வலம் என்பதால்....
ஒரு மனிதனின் பிறப்பு சாதாரணம் .ஆனால்,இறப்பு அப்படியல்ல.வளரும்போது ஒழுக்கமாக, வாழும் போது வள்ளலாக ,வயோதிபத்தில் புகழோடும் வாழ வேண்டும்.ஒருவரின் இறப்பு பிறருக்கு இழப்பைத் தர வேண்டுமாறு வாழ வேண்டும்.எரிச்சலைத் தருமாறு இருக்கக் கூடாது . ஏனெனில் இறுதிஊர்வலம் கூட உன் இயல்பை வெளிப்படுத்துவதாக உள்ளது.நம் நடைமுறை வாழ்வில்........!!!!

எழுதியவர் : பெ.ஜான்சிராணி (6-Sep-14, 10:46 pm)
Tanglish : unmaik kathai
பார்வை : 74

மேலே