இதோ வந்திச்சி நம்ம நாடு

வெறும் கற்பனை,
நகைச்சுவை மாத்திரமே ..! இழிவு படுத்துவது நோக்கமல்ல !

மூன்று நாட்டுக்காரர்கள் விமானத்துல பறந்து போய்கொண்டு இருக்கயில !

ஜப்பான் நாட்டுக்காரன் வெளியில கை விட்டு பார்த்துவிட்டு சொன்னானாம் ,
இது என்னுடைய நாடு ! அது எப்பிடி ?? ........இல்ல புகை கரை கைல பட்டுச்சி ...எங்கட நாட்டுலதான் நிறைய பாக்டரி இருக்குல்ல ...

அப்புறம் !

அமெரிக்ககாரன் வெளியில கை விட்டு பார்த்துவிட்டு சொன்னானாம் ,
இதோ பெரிய பில்டிங் எல்லாம் கைல படுகிறதே ...எங்க நாட்டுல தான் உயர்ந்த கட்டிடங்கள் எல்லாம் இருக்குதில்ல ...

அப்புறம் !
நம்ம நாட்டுக்காரன் வெளியில கை விட்டு மிச்ச நேரத்துக்கு பின்னர் பார்த்துவிட்டு சொன்னானாம் ,

இதோ , வந்துவிட்டது ..நம்ம நாடு ,,, ! அது என்ன அவ்வளவு உறுதியாக சொன்னீங்க என்று கேட்க .... இல்ல கைல இருக்கிற வாச்ச காணோம் .. நிறைய கலவாளிப்பய எங்க வேண்டுமானாலும் நிப்பான்கப்பா ...!!!!!!!

எழுதியவர் : ரிப்னாஸ் - தென்னிலங்கை (7-Sep-14, 12:42 pm)
பார்வை : 326

மேலே