2038 – TV Serialsssssss

(இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)

1.
சார், உங்களுக்கு கல்யாணம் ஆகுணும்னா நீங்க செய்ய வேண்டியது எல்லாம் ரொம்ப ஈசி. கார்த்தின்னு பேர்வச்சிங்க. காமாட்சின்னு ஹீரோயின் பேரு வைச்சிப்போம். எங்க சீரியல நடிங்க. உங்களுக்கு கல்யாணம் ஆகிடும்.

2.
என்னா அநியாயமா இருக்கு. எங்க காலத்துல 1000 எபிசோட் வந்தா பெருசா கொண்டாடுவாங்க. இப்பஎன்னடான்னா, 20000 எபிசோட் மேல வர சீரியலுக்கு கூட ஒரு கொண்டாட்டமும் இல்லயே.

3.
30 நிமிடம் இடைவெளி இல்லா சீரியல் இன்று - நாசமா போறவனே, கட்டைல போறவனே போன்ற அழகுவசனங்கள்.

4.
வீட்டு பெண்மணிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு. . எவ்வித இடஞ்சல் இன்றி சீரியல் பாருங்கள். உங்கள் வீட்டிற்கே Breakfast/Lunch/Dinners வந்து சப்ளை செய்கிறோம்.

5.
TRB ரேட்டிங் ஏறவே மாட்டேங்குது சார், என்ன செய்யலாம் சார்?
அது பெரிய மேட்டரே இல்ல. ஒரு வெள்ளிக்கிழமை புருஷன் பொண்டாட்டியை அடிச்சு காயப்படுத்துற மாதிரிமுதல் 7 நிமிஷம் காமிக்கலாம். அடுத்த 2 நிமிஷம் பொண்டாட்டி அழுவுற மாதிரி சீன் கடைசி 5 நிமிஷம்பொண்டாட்டியை சாகடிக்கிறதை லைவ்ல காமிக்கலாம்

எழுதியவர் : அரிஷ்டநேமி (7-Sep-14, 8:19 pm)
பார்வை : 378

சிறந்த நகைச்சுவைகள்

மேலே