அதிகார பாகுபாடு
பதிணெட்டு வயது வரை
பெண் பாதி அடிமை
தங்கக் கழுத்தில்
தாலி ஏறி விட்டால்
மீதி அடிமை!
என் தங்கையின்
சங்கு கழுத்தில்
நாளை முதல்
தாலி கொடியேற்றம்
நேற்று வரையவள்
எங்கள் வீட்டுக் கிளி
நாளை முதல்தான்
அவன் கூட்டுக் கிளி!
இறைவன் எழுதியிருக்கும்
மனித இலக்கியத்தில்
மனிதம் தொகுத்திருக்கும்
இலக்கண வடிவம்தான்
ஆண் பெண் எனும்
அதிகார பாகுபாடு!
பெண் எனும்
இலக்கயப் புத்தகத்தில்
புதைந்திருக்கும் படிமம்தான்
அடிமை எனும்
இலக்கண வடிவம்
ஆண் வாா்கத்தின்
அதிகாரப் படிமம்!