வருவாயா என் நினைவின் உயிரே

நீ சென்ற இடம் என் கால்களும்
நானறியாமலே செல்கிறது
உன் பார்வை பட்ட இடமெல்லாம்
என் விழிகளும் உலவிடுகிறதே
உன் சுவாசக் காற்றில் கலந்த
காற்று இப்போது எனக்குள்ளும்
சென்று உன் நினைவை நிலை
பெறச் செய்து வருதே எனக்குள்
மறுமுறை உன்னோடு வந்து
இருவரும் கை கோர்த்து
பார்த்து ரசித்திட மனம்
ஏங்கிடுதே வரும் நாளை
எண்ணி ஏங்கிடதே மனம்
சென்ற உன்னை விரைந்து
வரச்செய்திட தென்றலிடம்
சொல்லி அனுப்புகிறேன் செய்தி
கிடைத்ததும் தென்றலோடு தென்றலாக
வருவாயா என் நினைவின் உயிரே

எழுதியவர் : உமா (7-Sep-14, 4:25 pm)
சேர்த்தது : umauma
பார்வை : 83

மேலே