ஏரிக்கரை ஒரத்திலே
அந்த
ஏரிக்கரை மரத்தடியில்
எனையேந்தியிருந்தாள் தன்மடியில்
பஞ்சணை தோற்றுப்போனது
பாவையவள் மடியிலுறங்கும்போது
நெஞ்சோடெனை அணைத்துக்கொண்டு
நெற்றியில் இட்டாலொரு முத்தம்
நெஞ்சம் நெகிழ்ந்த அத்தருணம்
நினைவூட்டியதென் தாயை
தாய்க்குப்பின் தாரமென்பது
தவிர்க்க முடியாத
உண்மையே..........