இது ஓர் இயற்கையின் திரை படம்
வானத்தில் ஓர் திரைப்படம்!
தினமும் வெளியாகிறது!
இது ஓர் இயற்கையின் திரை படம்!
அங்கே நிலவும் சூரியனும் போட்டியிடும்
இரு கதா நாயகர்கள்!
பூமி பெண்ணின் மனம் கவர
காத்திருக்கும் இரு உள்ளங்கள்!
சூரியன் கிரணங்களை பரிசாக தருகின்றான்!
நிலவோ அழகை பரிசாக தருகின்றான்!
சூரியன் ஒளியில் நிலவு மறைந்தாலும்
அவன் ஓய்வெடுக்கும் இரவினிலே
நிலவு கண் அயர்வதில்லை!
மாதத்தில் ஓர் நாள் மறைந்தாலும்
மனம் தளராமல் வளர்கிறான்!
சூரியனும் விடுவதில்லை
இரவையும் கார்காலத்தையும் தவிர!
பூமி பெண் என்ன செய்வாள் பாவம்!
தன்னை தான் ஓர்முறை சுற்றுகிறாள் !
நிலவிற்காக!
ஓர் ஆண்டு சுற்றுகிறாள்
சூரியனுக்காக!
இருவரும் விலகுவதும் இல்லை!
இது ஓர் இயற்கையின் திரை படம்!