இருவிழி கவிதைகள்
கண்ணாடி அறைதனில்
கண் கொட்ட பார்க்கிறேன்
கண்ணால் (காதல்) சொல்ல
கன்னங்கள் வெட்கி சிவந்திட !!
கண் சிமிட்டா கன்னியை
கன நேரத்தில் செதுக்கினான்
கவித்துவத்தை அவன்
கண்ணில் கண்டதால்
கருத்துரை ஏதும் இன்றி
கரைந்து தான் போகிறேன் !!
இருவிழி கவிதையை
இதுவரை ரசித்ததில்லை
இரண்டு விழிகளை ஒரே நேர்கோட்டில்
இழுத்தீர்க்கும் ஒளி கண்களை
இன்று ஒளிந்து நின்று ரசித்த வரை !!