ப்ரியாவின்-உன்னை மறப்பேனா

ப்ரியாவின்-உன்னை மறப்பேனா...?

என் இதயத்தை
உன் இதயத்தோடு
வழி நடத்தத் தெரியா நான்...
உன் நினைவு
நொடிகளிளெல்லாம்
இப்படித்தான்..........!!

காகிதத்தோடு எழுதுகோலும்
காதலோடு நானும்
காத்திருந்த தருணங்களிலும்
இப்படித்தான் ......!!

இளநரைஎன்று நீ பிடுங்கிய
ஒற்றை முடி இன்று
வெண்காடாய் மாறியபோதும்
நான் இப்படித்தான்.....!!

உனக்கென காத்திருந்த
காகிதங்களெல்லாம்
காலம் கடந்தும்
மஞ்சள்நிறமேறி
மங்கியதையறிந்தும்
நான் இப்படித்தான்.........!!

நாள்தோறும் வரும்
லம்பாடி நிலா
போல தான் நான்
இன்றும் இப்படித்தான்.....
இருக்கிறேன்.......!!

இதோ....
நான் இறுதியாக
என் விழிமூடுகிறேன்.......

மூச்சு........
இதோ என் இறுதி
மூ...ச்...சு.....

இத்தருணத்திலும் உனையே
நினைக்கிறேன்............

உனையன்றி.......
வேறேதும் நினைப்பதற்கில்லை
எனும் மகிழ்ச்சியில்
செல்கிறேன்....!!

முடிந்தால்
என்னுடலை......உன்.....

காதல் காதல் காதல் காதல்
காதல் காதல் காதல் காதல்
காதல் காதல் காதல் காதல்
காதல் காதல் காதல் காதல்
காதல் காதல் காதல் காதல்
காதல் காதல் காதல் காதல்
காதலால் எரித்துவிடு............

என் ஆன்மாவாவது
வாழ்ந்துவிட்டு போகட்டும்
உன் நினைவோடல்லாமல்
உன் காதலோடு.............!!





-ப்ரியா

எழுதியவர் : ப்ரியா (8-Sep-14, 2:52 pm)
சேர்த்தது : PRIYA BALASARAVANAN (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 98

மேலே