காதல் ஒன்று வந்துவிட்டால்----------நிஷா

இருதயங்கள் இடம்மாறும்
இன்பவெள்ளம் ஊற்றெடுக்கும்
கலைந்த சில கார்மேகங்கள்
கனவினிலே உலாவரும்
கன்னியிவள் சிந்தையிலே
காதல் ஒன்று வந்துவிட்டால்.....

கண்கள் கொஞ்சம் பொய்கள் கூறும்
காற்றில் கூட கவிதை கேட்கும்
அலைபுரளும் கடல் அலைகள்
அடிக்கடிதான் நினைவில் வரும்
கன்னியிவள் சிந்தையிலே
காதல் ஒன்று வந்துவிட்டால்....

வார்த்தை எல்லாம் உளறல் ஆகும்
வசந்தம் தேடி வாழ்க்கை ஓடும்
நிலவொளியின் நீண்ட வெளிச்சம்
நெஞ்சமதில் நிலைத்து நிற்கும்
கன்னியிவள் சிந்தையிலே
காதல் ஒன்று வந்துவிட்டால்......

பேசும் வார்த்தை குறைந்து போகும்
மவுனம் ஒன்றே மொழியாய் மாறும்
வீசும் தென்றல் காற்று வந்து
வாழ்த்துச் சொல்லிப் பாடும்
கன்னியிவள் சிந்தையிலே
காதல் ஒன்று வந்துவிட்டால். .....

எழுதியவர் : நிஷா (8-Sep-14, 10:44 pm)
பார்வை : 161

மேலே