பல்சுவை வெண்பா
நேர்மை உனைகாக்கும்; நேசத்தால் வென்றிடலாம்;
கூர்மை அறிவும், குணமுந்தான்- ஓர்மையுடன்
கொண்டால் உயர்வாய்! கொடிகட்டி வாழ்ந்திடுவாய்!
திண்டாட வேண்டாம் தெளி.
நல்ல கவிதைஎது? நானின்று தேடினேன்
மெல்ல புரிந்தததன் மேன்மைதான்-சொல்லின்
சுவையோ அழகோ சுழல்வதில் இல்லை
கவினுற வேண்டும் கருத்து.
சென்னை அழைக்குமா சேவையைக் கேட்குமா?
என்னை மதித்தே இனிதாக- சின்ன
விருந்தும் கொடுத்து விருதும் கொடுத்து
அருந்தக் தருமோ அமிழ்து?
காதலில் மூழ்கிக் கருத்தும் சிதறிட
ஆதர வாய்க்கொள ஆளில்லை- தோததுவாய்
வாய்க்கும் கவிதையே வாழ்க்கைத் துணையென
ஏய்க்கும் கவிஞர் இவர் .
நண்பர்கள் சேர்ந்து நகரத்தின் ஓரத்தில்
கண்படா 'பார்க்குக் கரெக்டாக - உண்பதர்க் (கு)
இல்லா நிலைமறந்து இன்பமாய் போவரே
பொல்லாத போதை கொளுத்து.