அடங்காக் கோபம்
தகிட தகிட
தகதிமிதா
என்று இவள்
குதித்தாட,,,...!!!!
தகனவெறி
கொண்டு
கோபத்தில்
விழி ஆட,,...!!!!
சோகங்கள்
உள் மனதில்
ஆட,,,,..!!!!
தாகமும்
தீர்க்காமல்
தடம் புரண்டு
இவள் ஆட.....!!!!
சுதி தவறாமல்
ஒலிநாடா ஒலிக்க,,
ஜதி தவறாமல்
இவள் பாதம்
வளைந்தாட,,,,...!!!
நடனமாடு ம்
மங்கையின்
கைகளும்
படமென
வித்தைகள்
காட்டி ஆட,,...!!!
சலங்கை
அது சிதறி
பறந்தோட,,,...!!!
அரங்கம் அது
நடு நடுங்க
இவள் ஆட,,,...!!
ஊண்டு கால்
ஒன்று பதித்து
ஒரு கால் தூக்கி
தில்லை நடராஜனிடம்
எல்லை இல்லாப்
போட்டியில் இவள்
ஆட,,.....!!!!!
உடை அது
சற்று காற்றுக்குப்
பயந்தோட,,,...!!!
வியர்வை அது
அவள் உடலை
தன் வசப்படுத்தி
ஊர்ந்தோட,,...!!!
சுரக்கும் விழி
நீரும் வழிந்தோட
துடைக்க மனம்
இன்றி இவள் ஆட,,...!!!!
அவள் வளைந்தாட
அவள் குளுங்கி யாட
அவள் சுருண்டாட
அவள் குதித்தாட
அவள்துள்ளியாட
அவள் விழி உருண்டாட
அவள் முடி கலைந்தாட
அவள் சோகம் மட்டும்
வளை விடாமல்
அங்கேயே நின்றாட
அவள் மனம் நொந்தாடினாள்,,,..!!!!