துளிப்பா
தோல்விக்கு பின்
தோள் கொடுப்பது
அனுபவம்...
@@@@@@@@@@
வெற்றிக்கு பின்
வெட்டி எறிய வேண்டியது
ஆணவம்
@@@@@@@@@
ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தை காட்டுபவன்
முட்டாள்
@@@@@@@@@
வழக்கம் போல்
குற்றவாளிக் கூண்டில்,
நிரபராதிகள்
@@@@@@@@@@
கூண்டுக்குள்
இரு கிளிகள்
தனிக்குடித்தனம்