மானுடம் வெல்லுமா
மனிதன் மனிதனாக மாற ஆசை இல்லை
மனிதன் புனிதனாகவே ஆசைப் படுகிறான்
வறுமையில் வாடுபவர்க்கு உணவளிக்க
காலமெல்லாம் யோசிப்பவன் பெயர்
கோவில் அன்னதானம் செய்பவர் பெயரிடும்
இடத்தில் பார்ப்பவர் கண்களில் பளிச்சென
வேலைக்காரர்களை மதிப்பின்றி நடத்துபவர்
விழாக்கூட்டத்தில் மனிதர்களை மதிக்க
விரிவான விளக்க உரை பேச்சாளராக
கடவுளையே வீட்டில் குடி கொள்ள
வைத்து விட்டு நாத்திகரை கவர
கடவுளே இல்லை என்று கபட வேசம்
போட்டு கோஷம் போட்டு கூட்டம்
சேர்த்து தலைவனாக மாற்றம்கொள்வார்
பதுக்கி வைத்து மக்களுக்கு சுமையைத்
தந்திடும் பதுக்கல்காரன் தொலைநோக்கு
பார்வையுடன் மக்கள் முன்னேற்றம் பற்றி
பாங்காய் எடுத்துரைப்பான் பொதுச்சொத்தை
தன் சொத்தாக அபகரித்து கொண்டவன்
பொதுநலத்தொண்டு பற்றி மணிக்கணக்காக
மேடையேறி பேசுவான் அரைமணகொருமுறை
கடிகாரம் பார்த்து காலத்தை மதித்திடும் கடமை
தவறாத அதிகாரத்தில் உள்ள பலரும் அரைமணி
வேலையை முடித்துக்கொடுக்க மாதக்கணக்கில்
வயது பாராமல் அலையவைத்து வேடிக்கை பார்ப்பர்
விதவிதமான விந்தை குணமுள்ள மந்தையில்
இருப்பவர்கள் ஏராளம் இந்நாட்டில் இவர்களை
வைத்து காசு பார்த்து வாழ்பவர் கவலையின்றி
வாழ வழி செய்திட இவர்கள் போடும் வேசம்
புனிதராகல்ல புண்ணிய ஆத்மாவாகவே காட்டிடும்
மண்ணைப் போன்ற பொறுமை மிகு மனிதர்களுக்கு
நமது பொறுமையே சிறுமை மிகு மனிதர்கள்
வளர்ந்திட வாழ்ந்திட ஏதுவாகிறது....