அங்கே இடமிருக்கிறது-வித்யா

அங்கே இடமிருக்கிறது...!!-வித்யா
அன்பும் காதலும்
இதம் தரும்
சொர்கக்கதிர்கள்
சூழ்ந்திருக்கும்
இடமது........!!
நீலம்
பழுப்பென
வண்ணங்களும் அணிவகுக்கும்
அவை ஒன்றுக்கொன்று
சளைத்ததில்லை.......!!
அவ்விடம் அழகு மலர்களால்
அலங்கரிக்கப்பட்டிருக்கும்
அவை யாவும்
சிறந்தவையே......!!
இங்கு சிரிப்பது
தனி விருப்பமாகவும்
அழுதல் கட்டாயமாகவும்
விதி செய்யப்பட்டுள்ளது......!!
ஆம்......
ஆன்மாவை சுத்தபடுத்தி
புதிய கண்ணீர் பூக்கள்
மலரவே.....!!
இங்கு சிந்தும்
ஒவ்வொரு துளி
கண்ணீருக்கும் விலைமதிப்பில்லா
மதிப்புள்ளது.....சமமானது........!!
இங்கு பணமென்பது
மதிப்பற்றது......
எவ்வளவு ஈட்டினாலும்
எங்கு வாழ்ந்தாலும்
ஏற்றத்தாழ்வுகளுக்கு
வழிவகுக்காது.......!!
விண்ணொளி சூழ்ந்து
கவசமென காக்கும்
கவலைகளினின்றும்
வருத்தங்களினின்றும்......!!
புவியில் காணா
பேருலகம் புதைந்திருக்கிறது
அங்கே.......யாரும் யாரினும்
உயர்ந்தவனல்ல......!!
-நானும் அந்த இடத்தை தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.......தோழமைகளே..!!