மூளை வளராத பிள்ளையின் பாச கதறல்

தாய்பால் உண்டேனா என
அறியாத வயது என்
மூளை வளராத பொழுது
என்னை ஏசும் கண்கள் கண்டால்
கோபம் கொள்ளும் மனது
என் தாய்க்கு தாயமனசாய்

எல்லா உறவுகளும்
என் வீட்டு வாசலில் நிழலாடும்
என்றென்ன வில்லை
அன்று விடிந்ததும்
சோகமே உருவமாய்
அனைவர் முகத்திலும் ஒரே கவலை

என்னை பெற்றவள் பிரிந்தாளாம்
எனக்கே தெரியாமல்
அனைவரின் கவலையும்
என் எதிர்காலம் என்னவாகுமென
எப்படி நாட்கள் கடந்து போகுமென

என்னை உண்ண வைத்து பசியாறும் ஜீவன்
இன்றோ உயிரற்று உடலை இங்கு
அழ வேண்டுமா அழுகை எப்படி
என் அறியாத நான்
எப்படி அழுவேன் என் சோகம் கரைப்பேன்

இறைவன் பிழை என்னை இப்படி படைத்தது
எனக்கு வரம் என் தாய் கிடைத்ததற்கு
அனாதையாவ்து யார் வரம்
என உலகம் அறியாமல் நான்

எப்போதோ பார்த்த தெரிந்த முகமாய்
இருந்ததால் கேட்டேன் அந்த உறவிடம்
எனக்கு பசியென ??????

செய்வதறியாது திகைத்த அந்த உறவிடம்
என் தாயின் ஆத்மா சொல்லிர்யிருக்க வேண்டும்
என் பிள்ளை பசிதாங்க மாட்டான் என
தனியறையில் எனக்கு உணவு

பசி தீர்ந்ததும் உறங்கி போனேன்
விழித்து பார்கையில்
காணவில்லை சோறு ஊட்ட அம்மாவும்
என் சொந்த பந்தங்களும் ......

எழுதியவர் : ருத்ரன் (9-Sep-14, 12:32 pm)
பார்வை : 66

மேலே