வாழ்க்கை வரைமுறைகள்

மனதின் பல முகங்கள்
ஆசையின் உருவங்கள்
காரணம் பருவங்கள்
குறையாத கர்வங்கள்

தேடும் வடிகால்கள்
எல்லாம் தர்காலிகங்கள்
எதிலும் நிரந்திரம் இல்லா
முகமூடி புன்னகைகள்

மனதின் கோவங்கள்
இயலாமையின் அவலங்கள்
எல்லை மீறுமோ
வாழ்க்கை வரைமுறைகள்

சுயநலம் வளருமென்றால்
சொந்த லாபங்கள்
வாழ்கை தொலைத்துவிட்டு
தேடும் அபலங்கள்

எழுதியவர் : ருத்ரன் (9-Sep-14, 12:42 pm)
பார்வை : 90

மேலே