நகை வேலை
எண்ணப் பொன்னுடுடன்
அஹங்காரச் செம்பிட்டு
ஆசைத்தீயுருக்கி
அளவிலா ஈர்ப்புடனே
சொல்லுஞ் செயலுமாய்
செய்யும் நகையெல்லாம்
விருப்புவெறுப்பு வடிவில்தான்
வெகுநாளாய்ச் செய்கின்றோம்.
வடிவம் பிடிக்காமல்
உருக்கி வார்த்து
உருக்கி வார்த்து
நகை செய்வதிலேயே
நகருது காலமெலாம்.
செம்பதிகம் சேர்த்தாலோ
செய்யும்போதே
பல்லிளிக்கும்.
பார்ப்பவர் கண்ணெரிக்கும்.
பொன்னில் பிழையில்லை
வேணும் செம்புஞ் சிறிதளவு.
வார்க்கும் வடிவில்தான்
வாய்க்கிறது தவறெல்லாம்.
பற்றின்மை வடிவினிலே
பண்ணனும் நகையெல்லாம்
பார்ப்பவர் அகங்குளிர
பூணலாம் பரவசமாய்.