காதல்
உன் கை பிடித்து கொண்டு
காலாற நடை பயில
கதைகள் பேசி கொண்டு
நிமிடங்கள் நாம் தொலைக்க
காதல் என பெயர் வைத்தோம்
நம் பிள்ளையாய் நேசித்தோம்
கவிதைக்கு நடுவே சொல்ல
கொஞ்சம் மிச்சம் வைத்தோம்
பிரியும் சில நொடிகள்
மௌன விரதம் கொண்டோம்
நிஜ பிரிவு வருமென பயத்தில்
மரணத்தை தேர்ந்தெடுப்போம்