அவர் கண்ணுளே நோக்கி யுரை - ஆசாரக் கோவை 97

தொழுதானும் வாய்புதைத் தானுமஃ தன்றிப்
பெரியார்முன் யாது முரையார் பழியவர்
கண்ணுளே நோக்கி யுரை. 97 ஆசாரக் கோவை

பொருளுரை: அறிவிற் சிறந்த பெரியவரிடம் ஏதாவது ஒன்று சொல்ல வேண்டி இருந்தால்,
வணங்கி நின்றாவது, கையால் வாய் மறைத்து நின்றாவது சொல்ல வேண்டுமேயன்றி,
குற்றம் யாதும் உளவாகாமல் ஆராய்ந்து சொல்ல வேண்டும்.

‘வழியவர்' என்றும் பாடம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Sep-14, 9:55 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 881

மேலே