பாரதியார்

நம் குணம் நல் மனம் தந்த கொடை
அவனி எங்கும் தமிழர் மனம் பெற்ற இன்பம்
பாரதத் தாய் பெற்றெடுத்த பரந்த ஞானம்
திகழ்ந்த தொரு இளஞ் சிங்கம் வாகை சூடி
வாயசைவில் சாவினுக்கே சாபம் தந்த
கூர் மதியோன் குவலயத்தில் உனைப்போல
கண்டதில்லை..கேட்டதில்லை எங்கும் ..எங்கும்
நீர் பார் புகழும் பைந்தமிழன் பாரதி அன்றோ?
வாழ்க நீ எம்மான் என்று காந்தியைப் பாடிய
நின் சீர்மிகு தமிழதனை தொழுது நின்றோம்
நீர் மீண்டும் மீண்டும் தமிழரிடை தோன்ற வேண்டி.!
வாழ்க பாரதியார்!

எழுதியவர் : karuna (11-Sep-14, 4:57 pm)
Tanglish : BAARATHIYAAR
பார்வை : 153

மேலே