சிதறிய இதயம்

சந்தித்த நாளில் புதிய அனுபவம் தந்தாய்
பழகிய நாட்களில் இனிய நினைவுகளை தந்தாய்
காதலர் தினத்தில் காதலும் தந்தாய்
இவை அனைத்தும் நீ அறிவாய்....

அனால் உன் மனதின் ஓரமாய்
சிறிய இடத்தை ஆக்கிரமித்து விட்டேன்
உன்னையும் அறியாமல்...

நீ தந்த ரோஜாக்களின் மென்மையான ஸ்பரிசம்
நான் கற்ற புதிய மொழி ...

அமைதியான இரவிலும்
சர வெடியாய் நம் சிரிப்பு சத்தம்

நாசுக்கான காதலும் தன்னை பத்தி
புரிந்து கொண்டது இப்படியும்
காதலை சொல்லலாம் என்று...

ஏனோ காதலை உணரும் முன் காதலனை தொலைத்தேன்
நிஜத்தில் சிரிக்க வைத்தாய் நினைவுகளில் அழ வைக்கிறாய்
என்றும் உன்னோடு நான் நம்மோடு நம் காதல்!!!

எழுதியவர் : Ranith (11-Sep-14, 5:10 pm)
Tanglish : sithariya ithayam
பார்வை : 164

மேலே