ஏன் பிறந்தேனோ111
ஏனோ எழுத பிடிக்கவில்லை ,
எழுந்து என் முகம் பார்க்கவும் தோன்றவில்லை
எப்போதும் சிரிக்கும் உனை அழச்செய்த
என் தவறை எண்ணி ஒரு ஒரு நொடியும் சாகிறேன் ...!
நான் அப்படி ஒன்றும் தவறாக கேட்கவில்லையே ..1
எனக்கு அம்மாவை மட்டும் இரு என்றது தவறா..?
இல்லை பிள்ளைபோல நடக்காதே என்றது தவறா..?
நீ சமைத்து நான் அதை உண்ண நினைத்தது தவறா ..?
எப்போதும் செய்ததை எல்லாம் சொல்லிக்காட்டும் உன் பண்பை
மாற்றச் சொன்னது தவறா ..?
ஒவ்வொரு முறையும் உன்னை பெற்றேன் என்னும் - உன்
கர்வத்தை குறைக்க சொன்னது குற்றமா ..?
சிறுபிள்ளை முதல் உனக்காய் எனை இழந்து
நானும் தானே வாழ்தேன் என்பதை
நினைவூட்டியது குற்றமா .?
அம்மாக்கள் எல்லோருக்கும் பிள்ளையின் வார்த்தையின்
அர்த்தம் தெளிவாய் புரியுமாம் ..! - எனில்
என் வார்த்தைகளின் அர்த்தம் உனக்கெப்படி புரியவில்லை தாயே..?
தாயானவள் கோபத்திலும் தன பிள்ளையை சபிக்க மாட்டாள்
எனின் நீ எப்போதும் எனை சபித்துக்கொண்டே இருக்கிறாய் ..?
என் மனதில் உள்ள உணர்வினை அப்படியே வார்த்தையில் வடிக்க
எண்ணித்தான் ஆரம்பித்தேன் - என்னால் அது இயலாமல் போக
கண்ணீர் மட்டும் வடிக்கிறேன் ,
என் பிள்ளையை எண்ணி ....!!!!!!!!!!!
உன்னிடம் சொல்ல நன்றியும்
மன்னிப்பும் மட்டுமே எனில் உள்ளது .
I'm sorry mom,

