இளைய பாரதம்
சாய்ந்து நிற்கும்
பைசா கோபுரம் அல்ல..
இன்றைய இளைஞர்கள்..
முட்டு கொடுக்க வேண்டிய அவசியம்
அவர்க்கில்லை..!
எட்டுத் திக்கும் பறந்து சென்று
பட்டமும் பதவியும் பெற்ற போதும்
வீட்டில் வேலையின்றி நிற்கும் நிலை
வந்த போதும் -பாரத
நாட்டில் மாற்றம் ஒன்று கொண்டுவரும்
திண்மையுண்டு.. அவர்தம்
நெஞ்சக்கூட்டினிலே உண்மையுண்டு..
உழைப்பால் உயரும் வன்மையுண்டு..