உப்பு உண்டவன் சொல்

வருவாயாம்,
வரிப்பணமாம்,
வரதட்சணையாம்,
வாய்க்கரிசியாம்..

விவசாயமாம்,
விற்பனையாம்,
தன்மானமாம்,
தற்கொலையாம்..

கனவுக்கன்னியாம்,
காட்சிப்பொருளாம்,
கற்பழிப்பாம்,
கைவிலங்காம்..

கடைக்கண்ணாம்,
கவனிப்பாம்,
கருமம்,
காதலாம்..

மங்கையினமாம்,
மருத்துவப்படிப்பாம்,
மாற்றுவழியாம்,
மசக்கையானாலாம்..

உண்மையாம்,
உரிமைக்குரலாம்,
உண்டக்களைப்பாம்,
உறக்கமாம்..

பஞ்சமாம்,
பட்டினியாம்,
பதுங்குக்குழியாம்,
பலியிடுதலாம்..

கல்வியாம்,
காசுக்கணக்காம்,
காரணக்காரியமாம்,
கண்துடைப்பாம்..

பிறப்பாம்,
வளர்ப்பாம்,
வாழ்வாம்,
இறப்பாம்,

தேவையெல்லாம்,
சான்றிதழாம்.

எழுதியவர் : கல்கிஷ் (12-Sep-14, 7:20 pm)
பார்வை : 202

மேலே