இரங்கல் கவிதை - மகாகவிக்கு

அச்சம் என்னும் அழுக்கு போக
பாரத மாதா தேய்த்த சோப்பு !

புதுக்கவி இவனுள் புகுந்து ஆடும்
இவன்கை புனையும் செந்தமிழ் யாப்பு !

சாதித் தீயைத் தன்னைத் தானே
அணைக்க ஊற்றிய கவிகுடத் தண்ணீர் !

இவனால் அன்று ஏழை மக்கள்
மகிழ்வில் ஆழ்ந்தார் மறைந்தது கண்ணீர் !

சக்தியின் மேலே பக்தியின் பாக்கள்
வடித்துத் தள்ளியது இவன்கைப் பேனா !

என்னஓர் ஓட்டம் இவனது கவிகள்
கலியுகம் தன்னில் பொன்னிற மானா ?

குறும்புக் காரன் சாட்சிகள் உண்டு
வாலுடன் திகழும் இவனது பாகை !

இவனுக் குண்டு மூன்று கைகள்
இடக்கை வலக்கை மற்றது ஈகை !

விரிந்த நின்றி அதிலொரு திலகம்
அதனுள் பக்தி அதிகம் அதிகம் !

சாத்திய கீதம், கண்ணன் பாட்டு
எல்லாம் இவனது பாவிசைப் பதிகம் !


-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (12-Sep-14, 9:45 pm)
பார்வை : 127

மேலே