என்னோடு நீ-3

ஒருவாய் சோற்றில்
பற்கள் கண்டெடுத்த
சிறுகல்லா நீ...!
தோளில் சாய்ந்துகிடக்கும்
இதமான எனதுயிர்
கனமா நீ...!
பயணத்தில் இறங்குமிடத்தை
தாண்டி செல்லவைக்கும்
குட்டிதூக்கமா நீ...!
கவி வரிகளில்
பளிச்சிடும் எழுத்து
பிழைகளா நீ...!
ஒற்றைகாது மட்டும்
தொலைத்து தேடிடும்
காதணியா நீ...!
பனிக்காலங்களில் தோன்றிடும்
மெல்லிய இதழின்
வெடிப்புகளா நீ...!
தேர்வறையில் மை
தீர்ந்து போன
எழுதுகோலா நீ...!
கவிஞனின் ஓராயிரம்
கற்பனையின் அழகிய
தேடலா நீ...!
சூரியஒளியில் மெதுவாய்
கரைந்ததையே அறியாத
பனித்துளியா நீ...!
கடிகாரத்தில் நானே
அதிகரித்து வைத்த
ஐந்துநிமிடமா நீ...!