சிறைப்பறவை
செய்வதையெல்லாம் செய்துவிட்டு
மன்னிக்க வேண்டினாய்..
முடிந்தால் மறந்துவிடவும்
வலியுறுத்தினாய்..
காரணங்கள் ஆயிரம்
கூறிவிட்டு கைகளை
கட்டிகொண்டாய்..
காலங்களின் மீது
பழியினை போட்டுவிட்டு,
கருத்துகளை அடுக்கினாய்..
கணிப்புகள் தவறாகிவிட்டதென
கவலையின்றி கூறினாய்..
தவறு ஒவ்வொன்றிற்கும்
தத்துவங்கள் படைத்திட்டாய்..
காதலுறும் நேரம் மட்டும்
மௌனம் கலைத்துவிட
மறவாமல்
கோருகின்றாய்..
நீ
துப்பிய
வார்த்தைகளால்
உண்டானதுதான்
என் மௌனம் ..
பெற்றுகொள்
உன்
வார்த்தைகளை திரும்ப..
சிறு தடையமின்றி
கலைந்துவிடும்
என் மௌனம்.