அறுவடை

கனிவாய் பார்த்து சிரித்தவனை,
கண்ணியமாய் மதித்து நடத்தியவனை,
கனவில் தவறாமல் வந்தவனை,
கண்டவுடன் காதலுற செய்தவனை,
நம்பியது
ஒரு காலம்..!

பசித்த வேளையில் பகிர்ந்தவனை,
உண்மைகளை முழுதாய் உரைத்தவனை,
சிந்தனைகள் சிறக்க செய்தவனை,
மகரந்த பூக்களை தந்தவனை,
நம்பியது
ஒரு காலம்..!

கண்ணீர் துளிகளை துடைத்தவனை,
கட்டழகை கண்குளிர ரசித்தவனை,
கடமையென கருத்தாய் உழைத்தவனை,
தேடல்தான் வாழ்வென உணரச்செய்தவனை,
நம்பியது
ஒரு காலம்..!

நினைவுகளாய் நெஞ்சில் நின்றவனை,
வயதினை மறக்க செய்தவனை,
பொறுப்பாய் காவல் புரிந்தவனை,
வாழும்காலம் முழுதும் உடன்வருபவனை,
நம்பியது
ஒரு காலம்..!

எத்தனை காலம்தான்..
என்
கன்னிபருவத்தில்..!

காலத்தின் கைகளில்
நானும்
ஒரு
வேசிதான்..

நம்பிக்கைதான்,கற்பு
எனும் பட்சத்தில்..!!

எழுதியவர் : கல்கிஷ் (12-Sep-14, 7:23 pm)
பார்வை : 119

மேலே