வந்ததடி வண்ணத்துப்பூச்சி - இராஜ்குமார்

வந்ததடி வண்ணத்துப்பூச்சி
==========================
சிறகில் நிறத்தை
நிஜமாய் இழந்தது
வாசல் தேடி
வந்த வண்ணத்துப்பூச்சி

உன் நினைவை
வாசலில் அமர்ந்து
வாசித்தப் போது..!!

ரசித்து நிற்கும்
வண்ணத்துப்பூச்சி
தன் வண்ணம் தொலைத்து
உன் வண்ணம் கேட்குது ..!!

உன் வண்ணத்தை - அதன்
சிறகில் வரைந்து அனுப்பவா ??
இல்லை ...
எண்ணத்தை பறித்து - அதன்
கன்னத்தில் அறைந்து துரத்தவா ??..

- இராஜ்குமார்

நாள் : 21 - 5 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (12-Sep-14, 7:47 pm)
பார்வை : 181

மேலே