அடுத்த சந்திப்பு எப்போது

நீதானே வந்தாய்
உள்ளம் உருகி நின்றாய்
இனிக்கும் காதல் சொல்லி
எங்கே நீ சென்றாய்...!

இமைகள் மோதி
விழிகள் வலிப்பதில்லை
உன் முகத்தைதேடி
இதயம் வலிக்குதே...!

என் இரவை தொடரும்
முதற்கனவே......
மனதை பார்வையாலேயே பறிக்கும்
பருவ மலரே.......
எங்கே நீ சென்றாய்...!
ஏன் தனித்து விட்டு சென்றாய்...!!

கதை சொல்லும் தாயும்
கதை பேசும் நீயும் -ஒன்றே
இரண்டிலுமே என் தூக்கம்
சொர்க்கத்திலே...!

தேடலில் அதிகரித்த ஏக்கமும்
உன் கைசேர்த்த நேரமும் -ஒன்றே
இரண்டிலுமே என் தாகம்
தீர்ந்தபாடில்லை...!

அதிகாலை நிலவோடும்
அந்திமாலை பொழுதோடும்
யாருமில்லா மலைபாதையில்
உன்நிழலை துரத்தி பிடித்தே
நடை பயில வேண்டும்...!
எங்கே நீ சென்றாய்...!
ஏன் தனித்து விட்டு சென்றாய்...!!

சிறகுகள் விரித்தே தேடினேன்
மெல்லிய இறகே நீ
உதிர வீணே போகிறேன்...!

மீனாய் உன் நினைவுகளில்
நீந்தி வாழ்கிறேன்..
நீரி(யி)ன்றி தவித்தே துடிக்கிறேன்...!
எங்கே நீ சென்றாய்...!
ஏன் தனித்து விட்டு சென்றாய்...!!

இமைக்கும் நொடியும் உன்
பிரிவை தாங்காது உளறுகிறேனடி
அடுத்த சந்திப்பு எப்போதென்றொரு
குறுஞ்செய்தி அனுப்பு - காத்திருக்கிறேனடி
மீண்டும் இப்படி உளறுவதற்காக....!!!

எங்கே நீ சென்றாய்...!
ஏன் தனித்து விட்டு சென்றாய்...!!

எழுதியவர் : மணிமேகலை (12-Sep-14, 7:51 pm)
பார்வை : 284

மேலே