+இதயமாற்றம்+

அவள்இடம் கொடுத்தாள்
அவள்மனம் பிடிக்க‌
அவளிடம் கொடுத்தேன்
என்னிதயம்!

அவள்அதை எடுத்து
அன்பினைக் கொடுத்து
அவள்மனம் புகுத்தி
காதல்கொண்டாள்!

அவளது இதயம்
அவளிடம் விட்டு
அவள்தரும் வேளை
பார்த்திருந்தேன்!

அவள்தரும் முன்னே
அதுஎனை நோக்கி
ஆவலாய் வரவே
மகிழ்ந்திருந்தேன்!

இதயமாற்றம் வாழ்வில்
இன்பங்கள் கொடுக்க‌
இருஉள்ளம் இங்கே
இணைந்துள்ளதே!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (13-Sep-14, 7:17 pm)
பார்வை : 337

மேலே