கதிரவன் மேற்கே மறைந்தாலும்
செல் ஒன்று வந்ததினால்
செல்லரித்துப் போனதுதான் மிச்சம்.
உலகமே கைக்குள் வந்ததினால்
நானும் என்கைக்குள் அடங்கிப்போனேனே
மணிக்கணக்காய் விடாது பேசியதால்
பணமும் மடமடவெனக் குறைந்ததுவே
கவனமாய் வேலைசெய்தக் காலம்போய்
பேசுவதே வேலையாய் போனதுவே
இருதயக் கருவி உள்ளே இயக்குவதுபோல்
செல்கருவியும் உள்ளேவைக்கும் நாள்எந்நாளோ
இறந்தாலும் செல்லுடன் புதையுங்கள்
ஆவிகள்குழுவுடன் தொடர்ந்து பேசிடுவேன்
கதிரவன் மேற்கே மறைந்தாலும்
செல்லின் பந்தத்திற்கு மறைவேயில்லை

