நீயும் தாயா ?
![](https://eluthu.com/images/loading.gif)
எந்தன் நெஞ்சில் வஞ்சம் இல்லை
எந்தன் கண்ணில் கர்வம் இல்லை
எந்தன் தாயே உந்தன் வயிற்றில்
நான் பிறந்ததே தவறா ?
என்னை பெற்றவளே உன்னிடம்
கேட்கிறேன் உந்தன் மடியில்
நான் உறங்கியதாய் கூட எந்தன்
நினைவில் இல்லை .......
உந்தன் சுயநலத்திற்க்காக நீ
வாழ்கிறாயே நீயும் தாயா ?
தாய்க்குலத்தையே அசிங்கம்
செய்கிறாய் நீ ........
இதுவரைக்கும் நான் என்னம்மா
தவறிழைத்தேன் ....ஊருக்கெல்லாம்
நீ நல்லவள் என்றுதானே உரைத்தேன்
நீயோ என்னை வஞ்சிக்கிறாய்
சுயநலவாதியாய் ...........
சேயாய் நான் இங்கே கண்ணீர்
வடிக்கிறேன் .....எந்தன் கண்ணீர்
துடைக்க தாயில்லை ......எந்தன்
கண்ணீருக்கே தாய் தானே
காரணம் ......
இறைவா உன்னை வாஞ்சிக்கிறேன்
எந்தன் தாய்க்கு தாய்மை கொடுத்ததுக்கு
எந்தன் தந்தையை என்னிடம் இருந்து
பிரித்ததற்க்காகவும்........