தாய் எழுதிய ஓவியம்
![](https://eluthu.com/images/loading.gif)
தாய் எழுதிய ஓவியம் நான் ---அவள்
தாலாட்டிய இன்னிசை நான் ---அவள்
பாலூட்டி வளர்த்த பாசம் நான் ---அவள்
பாராட்டி அணைத்த கர்வம் நான் ---அவள்
முத்தத்தில் மலர்ந்த முல்லை மலர் நான் ---அந்த
உத்தமி பெற்ற ரத்தினம் நான் ----அவள்
நெஞ்சோ டணைத்துப் போற்றிய கவிதைப் புத்தகம் நான் !
~~~கல்பனா பாரதி~~~