பட்டணத்து காவல் தெய்வங்கள்
எசமானர்களின்
ஏச்சுக்களை ஏற்றுக்கொண்டு...
இரவு
பகல் பாராது...
மழை
வெயிலை பொருட்டாது...
குறைவூதியத்திலும்
குடும்பமானம் காக்க...
வலம்வரும்
வாயிற் காவலரே...
பட்டணத்தின்
காவல் தெய்வங்கள்!
-மா.உ.ஞானசூரி.