என் மனம்

மதில் மேல் பூனையாய்
என் மனம் அவளை பார்கையில்.....
பார்பதா? வேண்டாமா? என்ற குழப்பத்துடன்

நக கண்ணில் குத்திய ஊசி போல
என் மனம் துடிக்கிறது -அவள்
என்னை பாராமல் கடந்து போகையில்.....

ஆற்று வெள்ளம் போல்
ஆர்பரிகிறது என் மனம்
அவள் என்னை கடந்து போகும் நொடியில்....

நெருப்பை உமிழ்கின்ற சூரியனை போல்
கொல்கிறது என் மனம்
அவள் என்னிடம் பேசுவாள் என்ற பரிதவிப்பில்....

காலில் குத்திய முள்ளை போல்
வலிக்கிறது என் மனம்
அவள் என் அருகில் நின்று பேசுகையில்....

சண்டையிட்டு கொண்ட அந்த நொடியில்
நீ என்னுடன் பேசவேண்டாம் என்றதுகா
இந்த தண்டனை எண்ணி தவிக்கிறது
என் மனம்....

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (16-Sep-14, 9:17 am)
Tanglish : en manam
பார்வை : 65

மேலே