கடவுள்

கடவுள் இல்லை என்றான்
ஒருவன்
அப்படியா என்றேன்
கடவுள் உண்டு என்றான்
ஒருவன்
அப்படியா என்றேன்
உங்கள் நிலை என்ன ?
என்று இருவரும்
கேட்டனர்
நம்பிக்கை எனும்
ராடார் துணையுடன்
என் மன விமானத்தை
செலுத்துகிறேன்
கடவுளின் காலடி விமான தளத்தில்
சென்று இறங்குமா ?
யார் அறிவார் ?
நீங்கள் அறிவீரோ
என்று நான் கேட்டேன்
உண்டும் இல்லையும்
ஒருவரை பார்த்து நின்றனர் !
~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (16-Sep-14, 11:24 am)
Tanglish : kadavul
பார்வை : 75

மேலே