மானம் பிறந்த நாள் -செப்டம்பர் 17

தாயின் கருவறையில் இருந்து உலகை எதிர்கொள்ள வரும் பிறந்த குழந்தைக்கும் தகுதி ,இந்த சமூகத்தால் தீர்மானிக்கப்படுகிறது.ஆம் .இதோ பிறந்து விட்டான் !ரத்த சுத்தமாய் ஒரு உயர் சாதி வாரிசு என்றும்
இதோ பிறந்ததே அது சேரி வீட்டு பிள்ளை என்றும் பிறந்த குழந்தை முதுகில் முத்திரை குத்துகிறது
தன்னுடைய சமயமாக தன் தந்தையின் மதத்தை ஏற்று கொள்ளும் ஒருவன் ,அந்த மதம் தனக்கு பிடிக்காத பட்சத்தில் மற்ற மதத்தை தழுவுகிறான் .
இந்து மதம் சார்ந்த ஒருவன் ,கிருஸ்துவனாக தன்னை அடையாளப்படுத்தும் போது,இந்த உலகம் இன்று முதல் நீ கிருஸ்துவன் என்று ஏற்றுக்கொள்கிறது.

ஒரு ஆதி திராவிடன் எனக்கு இந்த சாதி பிடிக்கவில்லை.இன்று முதல் பூஜை,புனஸ்காரங்கள் செய்து கொண்டு பூணூல் தரித்து ஒரு பிராமணன் ஆக போகிறேன் என்றால் ஏற்று கொள்ளவது இல்லை.

பிறப்பு முதல் இறப்பு வரை தன்னையே பின் தொடரும் இந்த சாதி யாரால் உண்டாக்கப்பட்டது.
இவன் என் தலையில் இருந்து பிறந்தான் [உயர் சாதி ஆனான்]
இவன் என் காலில் பிறந்தான் [கீழ் சாதி ஆனான்]என்று படைப்பின் கடவுள் கூறியதாக சொல்கிறதே மனு தர்மம் அதை இன்னும் நம்புகிறதா இந்த சமூகம்.

முடி முதல் அடி வரை மனிதனுக்கு மனிதன் ஒன்று போல் இருக்க எதில் கண்டது சாதியை இந்த சமூகம் .ஓ!அது ரத்தமா?அவரச பிரிவில் கேட்டு நிற்கிறதா சாதி ரத்தம்[இந்த சமூகம்]

காலம் ,காலமாக ஒரே சாதி ,அதுவும் உட்பிரிவுகள் இருந்தால் அதில் மட்டும் திருமணம் என்ற மரபணு தொடர்ச்சியை சாதனையாக,.குடும்ப மானமாக,செய்து வருகிற நாம் சாதி கலப்பால் ,மரபணு மாற்றத்தால் விளையும் உயர் பயிர் போல் ,மனிதனின் மரபணு நிலை மாறும்,உயரும் என சிந்தித்ததுண்டா?

என்ன கேள்வி இது ?மூளை வளர்ச்சி குன்றிய முட்டாளா இருந்தாலும்,பாழும் குடிக்கி அடிமையாகி கிடப்பவனாக இருந்தாலும் சரி,பல நோய்கள் ஆள்கொண்ட நிலையில் இருந்தாலும் நான் பெத்த சுத்த சாதி தங்க மகளை ,என் சாதி மணவாளனான அவனுக்கு தருவேன் என்றால் தாரளமாக செய்யவும் ..........இப்படி பட்ட மன நிலையில் உள்ளவர்கள் சாதி கலப்படம் பண்ண தேவையே இல்லை .[ஏனென்றால் மூளை வளர்ச்சி குன்றியவர்களால் மாற்றம் உண்டாக போவது இல்லை.அது தரமற்ற விதை ]

ஏழை வீட்டு பிள்ளை ,சீமான் வீட்டு பிள்ளை என்றும் ,சாதியால் உயர்வு ,தாழ்வு என்றும் தகுதி பேசுதல் தரம் கெட்ட,அயோக்கியத்தனமான விமர்சனம்.

பிறப்பின் அடிப்படையில் அடிமை சங்கிலி திறக்க ஒரு 'அறிவின் திறவுகோல்' சென்ற நூற்றாண்டில் பிறந்து தன் வாழ்நாள் முழுவதும் சமூக சீர்திருத்ததிற்கே பணியாற்றி மறைந்தார்.அவர் தாம் 'தந்தை பெரியார்' 'பகுத்தறிவு பகலவன்.'

எறும்பும் ,ஈசலும் பிறந்த வண்ணம் இருந்து மடிய மனிதன் மட்டும் விமானம் படைத்தான்.ஏவுகணை தொடுத்தான்.எப்படி சாத்தியம் ?மனிதனின் பகுத்தறிவால் விளைந்தது..

அறிவியல் ஆராய்ச்சியில் மண்ணும்,விண்ணும் விளங்க பெற்றவன் .நாளைய பலன் என்ன? குறி கேட்டு போலி சாமியார் வாசல்,ஜோசியக்காரன் வீதிகளில் அலைகிறான் நிர்வாண பூஜை என்றாலும் தன் வீட்டு பெண்ணை தயங்காமல் அனுப்புகிறான்.
உழைத்தால் உயரலாம் ' என்று எண்ணாமல் ஏற்றம் காண மலை ஏறுகிறான்.
இன்னும் பல ,பல மூடநம்பிக்கைகள் முட்டுக்கட்டைகளாய் ................................
படித்தவன் ,பாமரன் ,ஏழை ,பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் மூளைக்கு போட்ட விலங்காய்..................................

மூளை விலங்கை உடைக்க அறிவோம் நாம்
'மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு'
'கடவுளை மற,மனிதனை நினை' என்றவரை .....
சுயமரியாதை சொன்னவரை ......................

சுயமரியாதை பெறுவோம் நாம் .

மரியாதை ,தகுதி என்பது பிறப்பின் அடிப்படையில் இல்லை .அது குணத்தின் அடிப்படையில் என உணர்வோம்.
சோம்பேறியாக ,சாப்பிட்டு ,சாப்பிட்டு தூங்குகிறவனுக்கும் ஓடி,ஓடி உழைக்கின்றவனுக்கும்...............
கொடுப்பவனுக்கும்,பிடுங்குபவனுக்கும் ................
மற்றவர் உணர்வுகளை மதிப்பவனுக்கும்,உதாசீனம் செய்பவனுக்கும் ...............
நல்லவனுக்கும் ,கெட்டவனுக்கும் ....................

தகுதி நிச்சயம் ஒன்றல்ல............தகுதி என்பது குணத்தால் மட்டுமே.........

சுயமரியாதை பெற ,தகுதியை வளர்த்து கொள்ள வேண்டும்.மற்றவரிடம் கை ஏந்தாமல் ,தன் உழைப்பில் உண்டு ,நாணயக்காரனாக,நம்பிக்கையானவனாக ,நேர்மையானவனாக,உண்மையானவனாக ஒரு மனிதன் இருந்தால் 'சுயமரியாதையுடன் சுகமாய் 'வாழலாம்.

பெரியார் பிறந்த நாளில் உறுதிக்கொள்வோம் ............'சுயமரியாதையுடன்' வாழ்வதற்கு

வாழ்க பெரியார்,வளர்க பகுத்தறிவு

எழுதியவர் : கௌதமி தமிழரசன் (16-Sep-14, 1:28 pm)
பார்வை : 193

மேலே