முழுமதியின் முதலிரவு

நீல வானம் மேகம் இன்றி
பட்டுக் கம்பளமாய்....
வெள்ளிடையாய் வெள்ளிகள் சிதறி
உதிர்த்த மலர்களாய்.....

முழுமதி அவள் முதலிரவோ.....?

காத்திருந்தாள் காத்திருந்தாள்
கதிரவன் வருகைக்காய்.......
கண்டவுடன் முகம் மறைத்தாள்
கதிரவன் அவன் காய்வதற்கோ....?

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை .அமுதா (16-Sep-14, 2:14 pm)
பார்வை : 97

மேலே