அன்புள்ள மனைவிக்கு
சித்திரங்கள் பேசுதோடி குழந்தை மொழிக்குழைவினிலே - என்று
நயாகரா இறங்கிவந்து வணங்கிநின்று வாழ்த்துசொல்ல.
எத்திறனோ பெற்றுவந்தாய் இப்படிவொரு குணம்படைக்க- நன்று
வாயார பாடுவேனே வாழ்த்துக்கள் பலசொல்லி
குழந்தைகளே பிடிக்குமென்று உலகமொன்றை ஸ்ரிஷ்டித்தாய் - நீ
அவ்வுலகமதில் நீயுமொரு குழந்தையாக மாறிவிட்டாய்.
வாழவைக்க வேண்டுமென்று ஏழைகளை கைநீட்டி - அவர்களுடன்
உறவாடி நீயுமொரு உத்வேகம் அளித்திட்டாய்.
கணவனென்ற பெருஞ்சுவர் நான்தாண்டி - உன்
காதுமடல் கோதுகின்ற ஒரு கனிவான தாயாக
காலமெல்லாம் நானிருப்பேன் உன் கைமேலானையாக.