பிறந்த நாள் வாழ்த்து கவிதை
அன்பு பெருக்கி
ஆசை கழித்து
இன்பம் கூட்டி
ஈகை வளர்த்து
உன்னத குழந்தையாய்
ஊக்கத்தில் உயர்வாய்
எண்ணத்தில் இமயமாய்
ஏற்றத்தில் ஏணியாய்
ஐயம் விளக்கி
ஒன்றே குலமென
ஒதும் மொழியாய்
ஔவை வயதுதாண்டி
நீ வாழிய வாழியவே..,