நான் ஒரு மனங்கொத்திப் பறவை

தினம் ஒரு படைப்பை
பிரசவம் செய்ய
பிரியமுடன்
சொன்னவள் நீ,

பரவசம் அடைந்து மனம்
எழுதத் தொடங்கினாலும்
ஞாபகக் குப்பைகளால்
சிதறுகின்றன வார்த்தைகள்

நீ உச்சரித்த வார்த்தைகளை
ஒன்று சேர்த்து உருவாக்கியதில்
ஒரு வழியாய் கிடைத்தது
நமக்கான இன்றைய கவிதை

நீ என்னோடு உலாவர
விருப்பம் தரும்
குறுஞ்செய்தியில்
மகிழ்கிறது என் மனம்.

இரைதேடப் புறப்படும்
இருவாச்சி பறவை
மனைவியை சிறைவைப்பதாய்
ஒரு சொலவடை.

இலக்கணத்தின்
எழுத்துக்களாய் நாமிருவரும்
ஊர் அறியா அன்பின்
பிழையில்லாத உயிரளப்பெடை

உன் நெஞ்சில் நான்
உயிருள்ள வரை
ஒரு மனங்கொத்திப் பறவை.

எழுதியவர் : priyaraj (17-Sep-14, 8:30 am)
சேர்த்தது : ப்ரியா raj
பார்வை : 135

மேலே